சர்வதேச நிகழ்வுகள்

கப்பல் துறையில் உலகின் முதல் கார்பன் வரிக்கு இந்தியா ஆதரவு

  • இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் 62 நாடுகள் ஐக்கிய நாடுகளின் கப்பல் அமைப்பால்  விதிக்கப்பட்ட உலகின் முதல் கார்பன் வரிக்கு ஆதரவாக வாக்களித்தன.
  • லண்டனில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைமையகத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, கடல்சார் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதையும், சுத்தமான தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு ஒட்டுமொத்த தொழில்துறைக்கும்  முதல் முறையாக  உலகளாவிய கார்பன் வரி விதிக்கப்படுகிறது.
  • இவ்விதியின்படி 2028 முதல், கப்பல்கள் குறைந்த உமிழ்வு எரிபொருட்களுக்கு மாற வேண்டும் அல்லது அவை உருவாக்கும் மாசுபாட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • இந்த ஒப்பந்தத்திற்கு சீனா, பிரேசில் உள்ளிட்ட 63 நாடுகள் ஆதரவளித்தன, ஆனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற எண்ணெய் வளம் நிறைந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன .
Next Current Affairs சர்வதேச நிகழ்வு >