சர்வதேச உறவுகள்

இந்தியா-பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்

  • இந்தியா-பிரிட்டன் இடையே நடைபெற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர்கள் நரேந்திர மோடி கியர் ஸ்டார்மர் ஆகியோர் முன்னிலையில் ஜூலை 24 கையொப்பமாகவுள்ளது.
  • வர்த்தகம். முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக் கம். பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, வளங்களின் நீடித்த பயன்பாடு சுகாதாரம் மற்றும் மக்கள் ரீதியிலான தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பரந்த ஒத்துழைப்பை கொண்டுள்ளன
  • 2023-24 நிதியாண்டில், இந்தியா-பிரிட்டன் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2134 கோடி டாலராக உள்ளது.
  • இதன்மூலம்  இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாரும் 99  சதவீத பொருள்களுக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும்.

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்

  • பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் முழ்கியிருப்பதாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.
  • பாகிஸ்தான் தீர்மானம் முன்னதாக மோதல்களை அமைதியான முறையில்  தீர்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் தொடர்பாக பாகிஸ்தான்  முன்மொழிந்த தீர்மானம்  ஐநா , பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக ஏற்று  கொள்ளப்பட்டது.
    • மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு. ஆங்கில அகர வரிசைப்படி  அதன் உறுப்பு நாடுகளிடையே மாதந்தோறும் சுழற்சி முறையில் ஒதுக்கப்படுகிறது.
    • அந்த வகையில் நடப்பு ஜூலை மாத தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) என்பது ஐ.நா.வின் ஆறு முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும்,
    • இதில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் (சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை வைத்துள்ளனர்.) உட்பட 15 உறுப்பினர்கள் உள்ளனர்
Next Current Affairs சர்வதேச உறவுகள் >