இந்தியா – கானா இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்து
இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதிகளில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க செல்லும் வழியில் கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கானாவுடன் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. கானாவுடன் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ‘பீட் கானா’ என்ற வேளாண் திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். மக்கள் மருந்தகங்கள் மூலம் கானா மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
கானா நாட்டின் மிக உயரிய ‘ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்’ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா நேற்று வழங்கினார்.