அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

டெங்கிஆல்

டெங்கிஆல் – இந்தியாவின் முதல் உள்நாட்டு டெட்ராவேலன்ட் டெங்கு தடுப்பூசியாகும் .

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் பணேசியா பயோடெக் லிமிடெட் மூன்றாம் கட்ட சோதனைகளை தொடங்க உள்ளன.

டெட்ராவேலன்ட் தடுப்பூசி – டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் (1 முதல் 4) எதிராக பயனுள்ளது.

உருவாக்கியது : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து பணேசியா பயோடெக்.

நிதியுதவி: முக்கியமாக ICMR ஆல் நிதியளிக்கப்பட்டு, பணேசியா பயோடெக் பகுதி ஆதரவு அளித்துள்ளது.

டெங்கு இந்தியாவில் ஒரு முக்கிய பொது சுகாதார நோயாகும், இந்தியா இந்த நோயின் அதிகபட்ச பாதிக்கபட்ட முதல் 30 நாடுகளில் ஒன்றாகும்.

தற்போது இந்தியாவில் டெங்குவுக்கான வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை அல்லது உரிமம் பெற்ற தடுப்பூசி எதுவும் இல்லை.
இந்தியாவில், தோராயமாக 75-80% தொற்றுகள் அறிகுறியற்றவை, இருந்தும் இந்த நபர்கள் ஏடிஸ் கொசுக்களின் மூலம் தொற்றை பரப்ப முடியும்.

Next Current Affairs அறிவியல் >