விண்வெளி
துருவ சுற்றுப்பாதையில் முதல் மனித விண்வெளிப் பயணம்
- சமீபத்தில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) பிளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் வரலாற்று சிறப்புமிக்க துருவ சுற்றுப்பாதை பயணத்தில் தனியார் விண்வெளி வீரர் குழுவை வெற்றிகரமாக அனுப்பியது.
- துருவ சுற்றுப்பாதையில் முதல் மனித விண்வெளிப் பயணம் : இதற்க்கு முந்தைய பயணங்கள் பூமத்தியரேகை சுற்றுப்பாதையைப் பின்பற்றுவதற்கு மாறாக, இந்த பயணம் பூமியை ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு சுற்றி வரும்.
- இந்த பாதை காலப்போக்கில் பூமியின் முழு மேற்பரப்பையும் கண்காணிக்க அனுமதிக்கிறது, இது காலநிலை ஆய்வுகள், உலகளாவிய கண்காணிப்பு, மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது.
- துருவ சுற்றுப்பாதை (PO) – ஒரு துருவ சுற்றுப்பாதை (PO) என்பது குறைந்த பூமி சுற்றுப்பாதையின் (LEO) ஒரு வகையாகும், இது 200 கிமீ முதல் 1,000 கிமீ வரையிலான உயரத்தில் உள்ளது.
- பூமத்தியரேகை சுற்றுப்பாதைகளுக்கு மாறாக, துருவ சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மேற்கிலிருந்து கிழக்கு வரை செல்வதற்குப் பதிலாக ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு பயணிக்கின்றன.
- துருவ சுற்றுப்பாதைகள் செயற்கைக்கோள்களை, கீழே சுழலும் பூமியின் முழு மேற்பரப்பையும் காலப்போக்கில் கண்காணிக்க அனுமதிக்கின்றன
அறிவியல் & தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
தேசிய மரபணு வங்கி
- இந்திய அரசு 10 லட்சம் பயிர் மரபணு பாரம்பரியத்தை பாதுகாக்க இரண்டாவது தேசிய மரபணு வங்கியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த முன்முயற்சி மத்திய பட்ஜெட் 2025-26 இன் “புதுமைகளில் முதலீடு (Investing in Innovations)” என்ற கருப்பொருளுடன் இணைந்துள்ளது.
இந்தியாவின் முதல் தேசிய மரபணு வங்கி
- இது 1996ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய தாவர மரபணு வள பணியகம் (ICAR-NBPGR) மூலம் புது டெல்லியில் நிறுவப்பட்டது.
- இது நார்வேயின் ஸ்வால்பார்ட் உலகளாவிய விதை களஞ்சியத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மரபணு வங்கி ஆகும்.
- இது பயிர் மேம்பாடு மற்றும் மரபணு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொது மற்றும் தனியார் அமைப்புகளுக்கு தாவர மரபணு வளங்களை வழங்குகிறது.
மரபணு வங்கி பற்றி
- மரபணு வங்கி என்பது தாவர இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும், எதிர்கால தேவைகளுக்காக அவற்றின் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்தவும் விதைகள், மகரந்தம், மற்றும் தாவர திசுக்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட சிறப்பு சேமிப்பு வசதியாகும்.