அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
விக்ரம் 3201 மற்றும் கல்பனா 3201
- இந்த இரண்டு மேம்பட்ட 32-பிட் நுண்செயலிகள் விண்வெளி பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை மற்றும் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப திறன்கள் கொண்டது
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் உருவாக்கப்பட்டது
- இந்த முயற்சி இந்தியாவின் “மேக் இன் இந்தியா” இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில் தன்னிறைவை ஊக்குவிக்கிறது
- விக்ரம் 3201 இந்தியாவின் முதல் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 32-பிட் நுண்செயலி ஆகும்.
- இது விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
விண்வெளி
சந்திரயான் – 5 திட்டம்
- அரசு சந்திரயான்-5 திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது
- இந்த திட்டம் ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்தப்படும்
- இத்திட்டம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை கொண்டு செல்லும்.
சந்திரயான் திட்டம்
- சந்திரயான்-1 (2008) – நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்தது
- சந்திரயான்-2 (2019) – சுற்றுக்கலம் வெற்றி, லேண்டர் விபத்துக்குள்ளானது
- சந்திரயான்-3 (2023) – நிலவின் தென் துருவத்தில் முதல் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கம்
- சந்திரயான்-4 (2027ல் எதிர்பார்க்கப்படுகிறது) – நிலவின் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்ப கொண்டு வருதல்
- சந்திரயான்-5 (2028ல் எதிர்பார்க்கப்படுகிறது) – 250 கிலோ எடையுள்ள ரோவருடன் மேம்பட்ட மேற்பரப்பு ஆய்வு
இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள்
- ககன்யான் திட்டம்: விண்வெளிக்கு இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் திட்டமாகும்.
- பாரதீய அந்தரிக்ஷ் நிலையம்: 2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமாகும்.