அறிவியல்

அறிவியல் & தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு

  • இஸ்ரோ, ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் இரண்டு விண்கலன்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்த முயற்சியில், 220 கிலோ எடையுள்ள ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என்ற இரண்டு விண்கலன்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.
  • விண்கலன்கள் ஒரே சுற்றுப் பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து, இடையேயான தொலைவை குறைத்து வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.
  • இந்த சாதனையுடன், இந்தியா “விண்வெளி டாக்கிங்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நான்காவது நாடாக இடம் பெற்றுள்ளது.
  • 2035-ஆம் ஆண்டுக்குள் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை விண்ணில் நிறுவும் திட்டம் முன்னோட்டமாக இது செயல்படுகிறது.

 

Next Current Affairs அறிவியல் >