அறிவியல்

விண்வெளி

ஆதித்யா-எல்1 திட்டம்

  • இஸ்ரோ ஆதித்யா திட்டத்திலிருந்து இரண்டாவது அறிவியல் தரவு தொகுப்புகளை  வெளியிட்டுள்ளது.
  • இந்த தரவுத் தொகுப்புகள் சூரியனின் ஒளிமண்டலம், வண்ணமண்டலம் மற்றும் அதன் வெளிப்புற வளிமண்டலம் (கொரோனா) பற்றிய மதிப்புமிக்க அறிவியல் தகவல்களுடன், முதல் பூமி-சூரியன் லகிரேஞ்ச் புள்ளி எல்1-இல் உள்ள துகள்கள் மற்றும் காந்தப்புல அளவீடுகளையும் உள்ளடக்கியது.
  • ஆதித்யா எல்1 தரவுத் தொகுப்புகள் இந்திய விண்வெளி அறிவியல் தரவு மையம் (ISSDC) தகவல்தளம்  மூலம் அணுகக்கூடியதாக இருக்கும்.

ஆதித்யா-எல்1 திட்டம் பற்றி 

  • இந்தியாவின் முதல் சூரிய அர்ப்பணிப்பு திட்டம். 
  • ஏவப்பட்ட தேதி: செப்டம்பர் 2, 2023
  • ஏவுகலம்: PSLV C-57 
  • தற்போதைய நிலை: எல்1-ஐச் சுற்றியுள்ள வளைய சுற்றுப்பாதையில் உள்ளது 
  • மூன்றாவது சுற்றில் சூரியனை கண்காணித்து வருகிறது. 
  • சூரிய செயல்பாடுகளை புரிந்துகொள்ள மற்றும் அவற்றின் பூமியின் மீதான தாக்கத்தை அறிய உதவுகிறது·
  • சூரிய புயல்கள், கொரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (CMEs), மற்றும் விண்வெளி வானிலையை ஆய்வு செய்கிறது.
Next Current Affairs அறிவியல் >