விண்வெளி
அக்னிபான் SorTeD
- சென்னையைச் சேர்ந்த விண்வெளி புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் என்ற தனியார் நிறுவனம் அதன் முதல் ராக்கெட்டான அக்னிபான் சப் ஆர்பிட்டல் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டரை (SOrTeD) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவியது.
- அக்னிபான் SorTeD என்பது,
- தனியார் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட்டாகும்
- இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் இன்ஜின் ராக்கெட்டாகும்.
- உலகின் முதல் 3D அச்சிடப்பட்ட இன்ஜின் மற்றும் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டது.
குறிப்பு
- இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் முயற்சியின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாட்டின் முதல் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ் ஆகும்.
- இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் இம்முன்முயற்சியானது இந்தியாவில் தனியார் விண்வெளித் துறையின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.