அறிவியல்

விண்வெளி

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-12

  • போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்வி எஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் வெற்றிகரமாக 2023 மே 29 விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட அந்த ராக்கெட் திட்டமிட்டபடி இலக்கை அடைந்ததைத் தொடர்ந்து, அத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
  • தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கா “இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு” என்ற கட்டமைப்பை (ஐஆர்என்எஸ்எஸ்) 
  • இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டு அமைப்பான “நேவிக்” (வழிகாட்டு) தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் என்.வி.எஸ்.-01 ஏவப்பட்டுள்ளது.
  • எல்-1, எல் 5, எஸ். போன்ற அதிக அலைவரிசை பேண்ட்களை பயன்படுத்தும் 5-ஆவது நாடு என்ற சிறப்பை இந்தியா பெறுகிறது.
  • முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கபட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு

  • இஸ்ரோ ஆகஸ்ட் 15, 1969 இல் டாக்டர் விக்ரம் சாராபாய் (இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை) அவர்களால் உருவாக்கப்பட்டது.
Next அறிவியல் >