அறிவியல்

விண்வெளி

இரு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

PSLV C-55

  • இந்திய விண்வெளி, ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

டெலியோஸ்-2

  • இஸ்ரோ வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.  அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்பட 2 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது.
  • இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டெலியோஸ்-2 741 கிலோ எடை கொண்டது.  புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இது ’சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்’ தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.  இரவு, பகல் என அனைத்துப் பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.  மேலும், இது இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
  • ஏற்கெனவே ’டெலியோஸ்-1’ செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் 2015 டிசம்பர் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லூம்லைட்-4

  • இதனுடன் ஏவப்பட்ட லூம்லைட்-4 (16 கிலோ) எனும் சிறிய செயற்கைக்கோள் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது.  இது கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்க உதவும்.
    ’போயம்-2’
  • இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் ’போயம்-2’ எனும் பெயரில் 7 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன.  இவை செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு பிஎஸ் 4 உதவியுடன் புவியை வலம் வந்து அடுத்த ஒரு மாதத்துக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
Next அறிவியல் >