அரசியல் அறிவியல்

அரசு – நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

HCE survey

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வீட்டு நுகர்வு செலவின ஆய்வு (HCES) 2023-24ஐ வெளியிட்டுள்ளது.
  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), MoSPIயின் கீழ் இந்த ஆய்வை நடத்தியது.

விவரம்

  • பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான குடும்பங்களின் நுகர்வு மற்றும் செலவினம் குறித்த தகவல்களை சேகரிக்க HCES வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார திட்டமிடல், வறுமை அளவீடு மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) புதுப்பிப்பதற்கான அத்தியாவசிய தரவுகளை வழங்குகிறது.
  • HCESஇல் இருந்து தொகுக்கப்பட்ட மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் (MPCE) பெரும்பாலான பகுப்பாய்வு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் முதன்மை குறிகாட்டியாகும்.

குறிப்பு

  • 18 பெரிய மாநிலங்களில், சராசரி MPCEயில் நகர்ப்புற-கிராமப்புற இடைவெளி 18 மாநிலங்களில் குறைந்துள்ளது.

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

நூற்றாண்டு ரயில்வே பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயர்

  • விவசாயிகளின் உரிமைக்காகப் போராடிய நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு நினைவாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும், பிறந்த ஊரான வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவுவிழா நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • நாராயணசாமி நாயுடு, விவசாயிகளுக்கென தனி அமைப்பைத் தொடங்கி, பல மாநிலங்களில் உழவர் சங்கங்களை உருவாக்கினார்.
  • 1982-ஆம் ஆண்டு இந்திய உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சியைத் தொடங்கினார் . அவருடைய வாழ்நாளில், உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார்
Next Current Affairs அரசியல் அறிவியல் >