அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மறு வாக்குப்பதிவு

  • இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் நடந்து வரும் மக்களவை பொதுத் தேர்தலில் மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவை நடத்தியது.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA), 1951 இன் கீழ் மறு வாக்குப்பதிவு தொடர்பான விதிகள்
  • பிரிவு 57 – இயற்கை பேரிடர், வன்முறை போன்றவை.
  • பிரிவு 58(2) – வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்துதல் அல்லது அழித்தல்.
  • பிரிவு 58A – வாக்குச் சாவடியை கைப்பற்றுதல்.
  • பிரிவு 52 – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் (தேசிய கட்சி/மாநில கட்சி) வேட்பாளர் மரணம்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

நமீபியாவில் UPI

  • நமீபியாவிற்கான உடனடி கட்டண முறை போன்ற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) உருவாக்க நமீபியாவுடன் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் சர்வதேசப்பிரிவு (NPCI) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • NPCI  சர்வதேசப் பிரிவு என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) வெளிநாட்டுப் பிரிவாகும்.

NPCI சர்வதேசப் பிரிவு (NIPL) பற்றி

  • உருவாக்கம் – 2020
  • CEO – ரித்தேஷ் சுக்லா
  • தலைமையகம்– மும்பை.
  • NIPL என்பது NPCI யின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்
Next Current Affairs அரசியல் அறிவியல் >