அரசியல் அறிவியல்

நலத்திட்டங்கள்

‘ என் கிராமம் என் பாரம்பரியம் ‘ திட்டம்

  • ‘என் கிராமம் என் பாரம்பரியம்’  திட்டத்தின் கீழ் (MGMD) அனைத்து கிராமங்களையும் வரைபடமாக்கி ஆவணப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் (IGNCA) ஒருங்கிணைந்து கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் கலாச்சார அமைச்சகம் ‘என் கிராமம் என் பாரம்பரியம்’  திட்டத்தைத் தொடங்கியது.

தெலுங்கானாவில்  2 நலத்திட்டங்கள் தொடக்கம்

  • மகாலட்சுமி திட்டம், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ என்ற இரண்டு திட்டங்களை தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி துவக்கி வைத்தார்.
  • மகா லட்சுமி திட்டம் – பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப்  (TSRTC) பேருந்துகளில் இலவச பேருந்துப் பயணத்திட்டம் .
  • ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டம் – வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் 10 லட்சம் வரை  சுகாதார காப்பீடு வழங்கும் திட்டம்.

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

போக்சோ வழக்குகளில் குறைந்த தீர்வு விகிதம்

  • இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தின் (ICPF) ஒரு புதிய ஆய்வுக் கட்டுரையின்படி, இந்தியாவில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 28 வழக்குகள் மட்டுமே தீர்த்து வைக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜனவரி 31, 2023 நிலவரப்படி 2.43 லட்சத்திற்கும் அதிகமான போக்சோ வழக்குகள் விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் (FTSCs) நிலுவையில் உள்ளன.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக FTSC கள் 2019 இல் அமைக்கப்பட்டன.
Next Current Affairs அரசியல் அறிவியல் >