அரசியல் அறிவியல்

இலவச உணவு தானிய விநியோகத்திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

  • மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) திட்டம் ஆரம்பத்தில் டிசம்பர், 2023 இல் முடிவடைய இருந்தது.தற்போது இது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

PMGKAY பற்றி

  • தொடக்கம்  – 2020 ( கோவிட் 19 தொற்றுநோயின் போது)
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ மானிய உணவு தானியங்களுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50%  சுகாதார காப்பீட்டிற்கான கோரிக்கைகளை அரசு மருத்துவமனைகள் பெற்றுள்ளன.

  • தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம்ஸ் ப்ராஜெக்ட் (TNHSP) வெளியிட்ட  ஆவணத்தின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் 2023 இல் இதுவரை 723 கோடிக்கான  சுகாதார காப்பீட்டு  கோரிக்கைகள்  பெறப்பட்டுள்ளன.
  • இதில் சுமார் 361 கோடி அரசு மருத்துவமனைகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த கோரிக்கைகளில் 50% ஆகும்.

CMCHIS பற்றி

  • தொடங்கப்பட்டது – ஜூலை 2009
  • இத்திட்டம் குறைந்த வருமானம், பின்தங்கிய குடும்பங்களுக்கு சுகாதாரக் காப்பீட்டை வழங்குகிறது.

குறிப்பு

  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) (செப்டம்பர் 23, 2018 அன்று தொடங்கப்பட்டது) என்பது தேசிய அளவிலான சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.
  • ஒருங்கிணைந்த ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY)-CMCHIS இன் கீழ் ‘அரசு நிதியை திறம்பட பயன்படுத்தியதற்காக’ சிறந்த நடைமுறைகளுக்கான விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >