அரசியல் அறிவியல்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்பு
ஆம் ஆத்மி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது

  • ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (NCP) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்தை திரும்பப் பெற்றது.
  • NCP, CPI, திரிணாமுல் ஆகிய கட்சிகள் நீக்கப்பட்டதால், நாட்டில் தற்போது 6 தேசிய கட்சிகள் மட்டுமே உள்ளன.அவை
  1.  பாரதிய ஜனதா கட்சி (BJP),
  2. காங்கிரஸ்,
  3. தேசிய மக்கள் கட்சி (NPP),
  4. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM),
  5. பகுஜன் சமாஜ் கட்சி (BSP), மற்றும்
  6.  ஆம் ஆத்மி கட்சி.

ஒரு தேசியக் கட்சியான அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகள்:

  1. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில்    மாநில கட்சியாக ‘அங்கீகாரம் ‘
    2.அதன் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் (சமீபத்திய லோக்சபா அல்லது சட்டமன்றத் தேர்தல்களில்) மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது 6% பெற்றிருத்தல்  மற்றும் கடந்த லோக்சபா தேர்தலில்  குறைந்தபட்சம் 4 எம்.பி.க்கள்
    3. குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் இருந்து லோக்சபாவில்  உள்ள மொத்த இடங்களில் குறைந்தது 2% வெற்றி.
Next அரசியல் அறிவியல் >