சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்
இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை
- இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மத்திய அரசு தரப்பில், 1.7.1987-க்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே அந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி கோர முடியும் என தெரிவிக்கப்பட்டது.
- மனுதாரர் இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்தவர் மட்டுமல்ல, 9 வயது இந்திய குழந்தையின் தாயாரும்கூட.
- தமிழகத்தில் கடந்த 37 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவரது பெற்றோரிடம் அவரிடமும் இலங்கைக்கு சென்று ஆவணங்களைப் பெற்று வரும்படி அதிகாரிகள் கூறுவது அர்த்தமற்றது.
- எனவே, மனுதாரர் இந்திய குடியுரிமை கோரி இணையவழியில் விண்ணப்பிக்க அவரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும்.
- அந்த விண்ணப்பத்தை சட்ட ரீதியாக பரிசீலித்து மத்திய அரசு தகுந்த முடிவெடுக்க வேண்டும். அதுவரை மனுதாரரையும், அவரது பெற்றோரையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்துள்ளாார்.
- வெளிநாடு வாழ் இந்தியர் (Non Resident Indian)
- இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் மற்றும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமகன்.
- இந்திய வம்சாவளியினர் (Person of Indian Origin)
- ஒரு நபர் எவருடைய முன்னோர்களில் எவரேனும் ஒருவர் இந்திய தேசத்தவராக இருந்து, தற்போது வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பவர். (பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, பூடான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் நேபாளம் தவிர). பி.ஐ.ஓ திட்டம் 09-01-2015 முதல் ரத்து செய்யப்பட்டது.
- இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை அட்டை வைத்திருப்பவர் (Overseas Citizen of India Card Holder)
- இது இந்திய வம்சாவளியை சேர்ந்த வெளிநாட்டு குடிமகனுக்கு இந்திய குடியரசில் வரையறையற்ற காலத்திற்கு வசிக்கவும் பணிபுரியவும் அனுமதிக்கும் குடிவரவு நிலையாகும். (பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச குடிமக்கள் தவிர). ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்பவருக்கு வாக்களிக்கும் உரிமைகள் இல்லை.