அரசு – நல அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு
Dx-EDGE முன்முயற்சி
- சமீபத்தில், இந்தியா ‘வளர்ச்சி மற்றும் தொழில்முனைவுக்கான டிஜிட்டல் சிறப்பு‘ (Dx-EDGE) முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது.
- இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) அத்தியாவசிய டிஜிட்டல் கருவிகள் மற்றும் அது சார்ந்த அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முன்முயற்சி இந்திய தொழில்கூட்டமைப்பு (CII), நிதி ஆயோக் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு (AICTE) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
- இது டிஜிட்டல்மயமாக்கல் மூலம் MSME களின் செயல்திறனை மேம்படுத்தி, அவற்றை போட்டித்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.