அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

சிறுபான்மை நிறுவனங்கள் & இட ஒதுக்கீடு பதிவுகள் குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு

  • மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இம் முக்கிய தீர்ப்பிணை வழங்கியுள்ளது
  • மாநில சிறுபான்மையினர் ஆணையம் இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றுவதை சரிபார்க்க சிறுபான்மை கல்வி நிறுவனங்களிடம் பதிவுகளை கோர முடியாது.
  • அரசியலமைப்பின் 30(1) பிரிவின் கீழ் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அரசியலமைப்பின் 15(5) பிரிவின் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன
  • அரசியலமைப்பு குறிப்புகள் & அவதானிப்புகள்
    • 93வது அரசியலமைப்பு திருத்தம் (2005):
    • சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி நிறுவனங்களில் அனுமதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு அனுமதி அளிக்கிறது.

    சரத்து  15 – மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக பாகுபாடு காட்டுவதற்கு தடை

    • பிரிவு 15 (5) – இந்திய அரசியலமைப்பின் சரத்து 15(5) கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு முக்கியமான விதியாகும்

     

    அரசு – நல நோக்கு கொண்ட அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

    பிரதமர் யுவா 3.0 திட்டம்

    • பிரதமர் யுவா 0 (இளம் எழுத்தாளர்களுக்கான பிரதமரின் வழிகாட்டுதல் திட்டம்) மார்ச் 2025 இல் கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
    • வாசிப்பு, எழுத்து மற்றும் புத்தக கலாச்சாரத்தை ஊக்குவிக்க இளம் எழுத்தாளர்களுக்கு (30 வயதுக்குட்பட்டவர்கள்) வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டது.
    • இத்திட்டம் முந்தைய பதிப்புகளின் வெற்றியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, இதில் 22 இந்திய மொழிகள் & ஆங்கிலத்தில் பங்கேற்பு இருந்தது.
    • ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் கீழ் கலாச்சார மற்றும் இலக்கிய பரிமாற்றத்திற்கு ஆதரவு அளிக்கிறது..
    • கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புத்தக அறக்கட்டளை (NBT) செயல்படுத்தும் நிறுவனமாகும்.

    கருப்பொருள்கள்

    • தேச கட்டுமானத்தில் இந்திய புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு (10 எழுத்தாளர்கள்).
    • இந்திய அறிவு அமைப்பு (20 எழுத்தாளர்கள்).
    • நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் (1950-2025) (20 எழுத்தாளர்கள்).
Next Current Affairs அரசியல் அறிவியல் >