வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி

  • ரூ.1 லட்சம் கோடியில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி உருவாக்குவது, ரூ.10,000 கோடியில் குறு உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களை அமைப்பது, மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4,000 கோடி, மீனவர்கள், மீன் வளம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி உள்ளிட்ட திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • விவசாயிகள் நலன் காக்கப்படும்:  தேசிய பொது முடக்கம் அமலில் உள்ள கடந்த 2 மாத காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து ரூ.74,500 கோடி வேளாண் உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
  • உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இது தவிர வேளாண் துறையில் ”ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
  • குறு உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு:  உணவுப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • மீன் வன மேம்பாட்டுக்கு ரூ.20,000 கோடி:  மீனவர்கள் மீன் வளம் சார்ந்த பிரதமர் மீன்வளத் துறை நிதித் திட்டத்தின்கீழ் ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • கால்நடை வளர்ப்பு ஊக்குவிப்பு:  ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள மாடுகள், ஆடுகள், பன்றிகள் என பொருளாதாரத்துக்காக வளர்க்கப்படும் அனைத்து கால்நடைகளுக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.13,343 கோடி ஒதுக்கப்படும்.
  • மூலிகைப் பண்ணைகள்: நாட்டில் மூலிகை வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேர் நிலம் மேம்படுத்தப்பட்டு மூலிகைப் பண்ணைகள் அமைக்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • தேனீ வளர்ப்பு மேம்பாடு: தேனீ வளர்ப்பை மேம்படுத்த ரூ.500 கோடியில் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்தத் தொழில் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • வேளாண் போக்குவரத்து மானியம் விரிவாக்கம்: இதுவரை தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய பயிர்களுக்காக மட்டும் மேற்கொள்ளப்பட்ட பசுமைத் திட்டம் (ஆபரேஷன் கிரீன்) அனைத்து பழங்கள், காய்கறிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
  • அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம்:  தேசியப் பேரிடர், பஞ்சம் ஏற்படும் காலங்களில் மட்டுமே இருப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >