‘நார்வே செஸ்’
- இந்தியச் சதுரங்க வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக, மதிப்புமிக்க ‘நார்வே செஸ்’பட்டத்தை வென்ற முதல் இந்திய கிராண்ட்மாஸ்டராக ஆர். பிரக்ஞானந்தா திகழ்கிறார்.
- நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக இரண்டு வெற்றிகள் உட்பட மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் அந்தப் பட்டத்தை வென்றார்; இது இத்தொடரில் அவரது ஆதிக்கத்தை பறைசாற்றியது.
நடப்பு தகவல்கள்
நீலகிரி வரையாடு- மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய தனிச்சிறப்பான விலங்கு நீலகிரி வரையாடு.
- ‘வரை’ என்றால் பாறை; செங்குத்தான பாறைப் பகுதிகளில் இவை வாழ்வதால் ‘வரையாடு’ என அழைக்கப் படுகிறது.
- உலக அளவில் அறியப்படும் மூன்று வகை வரையாடுகளில், தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே இனம் இது. தமிழகத்தின் மாநில விலங்கான இது, கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 2,600 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது.
- சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணி, நற்றிணை, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல் போன்ற நூல்களில் வரையாடும் அதன் மலை வாழ்விடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
- தமிழர் பண்பாட்டில் வரையாடு தொன்றுதொட்டுப் பெற்றுவந்த முக்கியத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது.
- கேரளத்தின் மறையூருக்கு அருகில் உள்ள எழுத்துப்பாறைப் பகுதியில் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த வரையாடு ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இது மனிதர்களுக்கும் வரையாட்டுக்குமான பல்லாயிரம் ஆண்டுக் காலத் தொடர்பை உணர்த்துகிறது.
- தமிழக அரசின் ‘வரையாடு பாதுகாப்புத் திட்டம்’ சோலைப் புல்வெளி உயிர்ச்சூழலை மீட்டெடுத்துப் பாதுகாக்கும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.
- வரையாடு ஆய்வாளர் இ.ஆர்.சி. டேவிதாரின் பிறந்தநாளான அக்டோபர் 7 ‘வரையாடு நாளாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைகள் இணைந்து நடத்திய மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மாநில விலங்கான, அழிந்துவரும் இனத்தைச் சேர்ந்த ‘நீலகிரி வரையாடு’களின் எண்ணிக்கை சுமார் 1,364-ஆக உயர்ந்துள்ளது.
- இந்த எண்ணிக்கை, 2025-இல் பதிவு செய்யப்பட்ட 1,303 வரையாடுகளுடன் ஒப்பிடுகையில் 4.68 சதவீத வளர்ச்சியையும், 2024-இல் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின்போது கணிக்கப்பட்ட 1,031 வரையாடுகளுடன் ஒப்பிடுகையில் 32 சதவீத வளர்ச்சியையும் குறிக்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்
- புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முந்தைய நிதியாண்டான 2024-25-ல் 7.1% ஆக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம், 2025-26-ல் 7.7% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

