யுத்த சேவா பதக்கம்
- பின்னணி : இந்திய கடற்படையால் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட போது சிறப்பாக பணியாற்றிய இரு கடற்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டது .
- போர்நிலையில் சிறப்பாக பணியாற்றிய உயரதிகாரிகளுக்கும் யுத்த சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டு, அதில் துணை அட்மிரல் ஏ.என். பிரமோத் ராகு கோகலே கௌரவிக்கப்பட்டார்.
ஆபரேஷன் சிந்துார்
- ஆபரேஷன் சிந்துார் என்பது பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7, 2025 அன்று இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஒரு துல்லியமான தாக்குதல் ஆகும்.
- இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக மேற்கொள்ளப்பட்டது.
- ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு பல தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர்.
நடப்பு தகவல்கள்
NATO – வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
- நேட்டோ (NATO) என்பது அமைதி மற்றும் கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு இராணுவக் கூட்டணியாகும். இதன் 5-வது சரத்தின்படி , ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலானது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
- ஏப்ரல் 4, 1949 அன்று ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த 12 நாடுகளால் நிறுவப்பட்டது.
- நிறுவன நாடுகள்: பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் அமெரிக்கா (USA).
- தலைமையகம்: பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்
- ஆரம்பத்தில் இருந்த 12 நாடுகளில் இருந்து தற்போது 32 நாடுகளாக விரிவடைந்துள்ளது.

