வைக்கம் விருது
- சமூக நீதிக்கான, சமத்துவத்திற்கான மற்றும் மனிதநேயத்திற்கான பங்களிப்புகளை மதித்து வழங்கப்படும் ஒரு மாநில விருது ஆகும்.
- இந்த விருது வைக்கம் வீரர் பெரியார் ஈ.வி.ராமசாமி அவர்களின் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து வழங்கப்படுகிறது.
- இவ்விருதை தொடங்கிய ஆண்டு 2022 ஆகும்
- தமிழக முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது.
- பெரியாரின் பிறந்தநாள் (செப்டம்பர் 17) நிகழ்ச்சிகளின் போது பொதுவாக வழங்கப்படும்.
- வைக்கம் விருதானது, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியன அடங்கியதாகும்.
- விருதின் நோக்கம்
- சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை, சுயமரியாதை, மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை கௌரவிப்பது ஆகும்.
- “வைக்கம் போராட்டத்தின் மதிப்புகளான சாதி எதிர்ப்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நினைவுபடுத்துவதே இவ்விருதின் அடிப்படை நோக்கம்
தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்
- தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அவர் அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.கட்டமைப்பு ஜாதியத்தால் ஓடுக்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
- அமெரிக்காவிலும், உலக அளவிலும் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸின் நிறுவனராக உள்ளார்.
- அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான அவரது பணிகளுக்காகவும் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நீதித்துறையில் அவரது பங்களிப்புகளுக்காகவும் வைக்கம் விருதுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் தேர்வு

