பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
DUSTLIK-VI பயிற்சி
- சமீபத்தில், இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியான DUSTLIK-VIன் 6வது பதிப்பு அவுந்த் (புனே) வெளிநாட்டு பயிற்சி மையத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
- DUSTLIK பயிற்சி இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் சுழற்ச்சிமுரையில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர இருதரப்பு இராணுவப் பயிற்சியாகும் இதன் முந்தைய பதிப்பு (DUSTLIK-V) ஏப்ரல் 2024இல் உஸ்பெகிஸ்தானின் டெர்மெஸ் மாவட்டத்தில் நடைபெற்றது.
- முதல் பதிப்பு நவம்பர் 2019இல் உஸ்பெகிஸ்தானில் நடத்தப்பட்டது, இது ஒரு கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- DUSTLIK-VIன் மைய கருப்பொருள் “ Joint Multi-Domain Sub-Conventional Operations in a Semi-Urban Scenario
ஆபரேஷன் சக்ரா V
- நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றம்/டிஜிட்டல் கைதுகளுக்கு எதிராக சிபிஐ ஆபரேஷன் சக்ரா-V ஐத் தொடங்குகிறது.
- இது இந்தியாவில் நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் வழியில் செயல்படும் நிதி குற்றங்களுக்கு எதிராகப் போராட தொடங்கப்பட்டது.
- தொடங்கிய அமைப்பு : மத்திய புலனாய்வு பணியகம் (சிபிஐ)
- இது இந்தியாவில் டிஜிட்டல் கைதுகள் போன்ற சைபர் குற்றங்களை இயக்கும் பரந்த உள்கட்டமைப்பை அடையாளம் காணுதல் மற்றும் அழிப்பதில் கவனம் செலுத்தும் பல்வேறு உத்திகளை உள்ளடக்கியது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
- இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்த சாதனை படைத்த கலைஞர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அறிவித்தார்.
- அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
- சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.
- இளைஞர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மதுரை அரசு கவின்கலைக் கல்லூரியில் ரூ.24 லட்சத்தில் நாடகப் பிரிவு தொடங்கப்படும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்த புதிய செயலி உருவாக்கப்படும்.
- சென்னை அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஏப்.2026-ம் ஆண்டோடு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சிய வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்