புதிய நியமனங்கள்
அருணாச்சலத்தின் புதிய முதல்வர்
- தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார்.
- அவருக்கு ஆளுநர் கே.டி. பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அருணாச்சல பிரதேசம் பற்றி
- தலைநகரம் – இட்டாநகர்
- முதல்வர் – பெமா காண்டு
- ஆளுநர் – கே.டி. பர்நாயக்
முக்கிய அதிகாரிகள் நியமனம்
- இரண்டாவது முறையாக பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
- மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) அஜித் தோவல் நியமிக்கப்பட்டார்.
- இவர்களின் நியமனங்களுக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்தது.
குறிப்பு
- முதன்மைச் செயலாளர் – பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார்.
- NSA – தேசிய பாதுகாப்புக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் தலைமை ஆலோசகர் ஆவார்.