முக்கிய தினங்கள்
சர்வதேச செவிலியர் தினம்
- புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த தினம் முதன்முதலில் சர்வதேச செவிலியர் அமைப்பால் 12 மே 1974 அன்று அனுசரிக்கப்பட்டது.
- 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்: Our Nurses. Our Future. The economic power of care
விருதுகள் மற்றும் கௌரவம்
சாகித்ய அகாடமி பெல்லோஷிப் விருது
- சமீபத்தில் எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு சாகித்ய அகாடமி பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது.
- இது இலக்கிய அமைப்பினால் வழங்கப்படும் உயரிய கௌரவம் ஆகும்.
ரஸ்கின் பாண்ட் பற்றி
- 1992 இல் ‘Our Trees Still Grow in Dehra’ என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
- விருதுகள்
- பத்மஸ்ரீ – 1999
- சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் – 2012.
- பத்ம பூஷன் – 2019