முதன்முதலாக புயலுக்கு தமிழ்ப் பெயர்

  • இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களின் பெயர்ப் பட்டியலில் 2 தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
  • வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும்.
  • இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சார்பில் 8 பெயர்கள் வீதம் 64 பெயர்கள் வழங்கப்பட்டன.
  • 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலில் இருந்து 63 பெயர்களும் வைக்கப்பட்டன.
  • இதில் தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (Amphan) என்ற பெயர் மட்டும் மீதமிருக்கிறது.
  • இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2 தமிழ்ப் பெயர்கள்

  • இதில் இந்திய வானியல் ஆய்வு மையம் கொடுத்த ”முரசு” எனும் பெயர், பட்டியலில் 28-ஆவது இடத்தில் உள்ளது.
  • பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட ”நீர்” எனும் பெயரும் 93-ஆவதாக இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கப்படும்.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >

People also Read