முக்கிய நாட்கள்

பழங்குடியினர் கௌரவ தினம் 

  • பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரரும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவருமான பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • அவரது 150வது பிறந்த தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
  • பிர்சா முண்டாவின் தியாகம் மற்றும் போராட்டங்கள் மற்றும் பிற இந்திய பழங்குடியின தலைவர்களின் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் கொண்டாடும் வகையிலும் நாட்டின் பன்முகத்தன்மையுடன் கூடிய பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • பழங்குடியின வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
  • வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் 11 அருங்காட்சியகங்களை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Next Current Affairs முக்கிய நாட்கள் >