உலக சிக்கன நாள்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- 1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது அக்டோபர் 31ஆம் தேதியை உலக சிக்கன தினமாக அறிவித்தனர்.
- 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நம் நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்தியாவில் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- சேமிப்பு, சிக்கனம் போன்றவைபற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

