சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
ஆரவல்லி பசுமை சுவர் திட்டம்
- உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பசுமை காக்க ”தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” பிரச்சாரத்தையும் பிரதமர் தொடங்கினார்.
- ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யஎன்இபி) கீழ் 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டம் என்பது மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பசுமைப் போர்வையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
- ஆரவல்லி மலைத்தொடரில் மொத்த காடுகள் அழிக்கப்பட்டதில் 81 சதவீதம் ராஜஸ்தானையும், 15.8 சதவீதம் குஜராத்தையும், 1.7 சதவீதம் ஹரியானாவையும், 1.5 சதவீதம் டெல்லியையும் சேர்ந்தவை.
ராஜஸ்தானில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள் – கிச்சன் மற்றும் மேனார்
- இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ராஜஸ்தானில் இரண்டு புதிய ராம்சார் தளங்களை நியமிப்பதாக அறிவித்தது.
- கிச்சன் மற்றும் மேனார் நீர்நிலைகள் அவற்றின் சூழலியல் முக்கியத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆசியாவில் அதிகபட்சமாக இந்தியாவில் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 91 ஆக உயரந்துள்ளது ,.
- ராம்சார் மாநாடு உலகளவில் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
- ராம்சார் தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளாகும். இவை 1971ல் நிறுவப்பட்ட ராம்சார் மாநாட்டின் கீழ் நியமிக்கப்படுகின்றன.