புவியியல்

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

சூழலியல் அமைப்புகளின் சிவப்பு பட்டியல்

  • சமீபத்தில், மாங்குரோவ் சூழலியல் அமைப்புகளின் சிவப்பு பட்டியலை” IUCN வெளியிட்டது.
  • இது உலகெங்கிலும் உள்ள சதுப்புநில சூழலியல் அமைப்புகளின் முதல் உலகளாவிய மதிப்பீடு ஆகும்.

முக்கிய கண்டுபிடிப்புகள்

  • சதுப்புநில சூழலியல் அமைப்புகள் 50% வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ளன.
  • 2050ம் ஆண்டிற்குள் கடல் மட்ட உயர்வு காரணமாக சுமார் 7,065 கிமீ2 (5%) கூடுதலாக சதுப்புநிலங்கள் இழக்கப்படும் மற்றும் 23,672 கிமீ2 (16%) நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
  • தமிழ்நாடு, இலங்கை மற்றும் மாலத்தீவுகளைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்கள் ‘அழியும் அபாயத்தில் உள்ளவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு

  • சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை 20 கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளது.
  • இந்திய அரசின் வன அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் சதுப்புநிலங்களின் அளவு 2001 இல் 23 சதுர கிலோமீட்டரிலிருந்து 2021 இல் 45 சதுர கி.மீ வரை இரட்டிப்பாகியுள்ளது.
  • தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் இதுவரை 25 சதுர கி.மீ பரப்பளவில் சதுப்புநில மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
Next Current Affairs புவியியல் >