புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய திட்டங்கள்

 • ஒரே ரேஷன் கார்டு: ”ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும். அப்போது ரேஷன் கார்டை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் உணவு தானியத்தைப் பெற முடியும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் 83 சதவீதம் பேர் ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்குள் வந்துவிடுவார்கள்.
 • விவசாய கடன் சலுகை: 25 லட்சம் புதிய கிஸான் கடன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.25,000 கோடி கடன் அளிக்கப்படவுள்ளது.
 • இது  தவிர ஏற்கெனவே கிஸான் கடன் அட்டைகள் வைத்துள்ள 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் குறைந்த வட்டியில் அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் மீனவர்கள், கால்நடை வளர்ப்போரும் பயனடைவார்கள்.
 • சாலையோர வியாபரிகளுக்காக ரூ.5,000 கோடி: ரூ.5,000 கோடி சிறப்பு கடன் வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழிலுக்கான நடைமுறை மூலதனமாக தலா ரூ.10,000 கடன் அளிக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக சமூக பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 • முத்ரா – சிசு திட்டத்தில் வட்டி சலுகை: முத்ரா-சிசு திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்தி வருவோருக்கு அடுத்த ஓராண்டுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு சலுகை கிடைக்கும். இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி செலவிட இருக்கிறது.
 • ஒருங்கிணைந்த காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில்ரூ.6000 கோடி ஒதுக்கப்படுகிறது.
 • வீடு கட்ட வட்டி சலுகை தொடரும் : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையுள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கான குறைந்த விலை வீட்டு கடனுக்கு வழங்கப்படும் வட்டி திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.5 லட்சம் பேர் பயனடைவார்கள்.
 • வேலைவாய்ப்பு உருவாக்கம் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2 மாதங்களில் ரூ.10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 • வெளிமாநிலத்துக்கு சென்று பணியாற்றி விட்டு இப்போது சொந்த மாநிலம் திரும்பியுள்ள தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
 • இதன் மூலம் 14.62 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். புதிதாக 2.33 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • கிராம உள்கட்டமைப்பு : இது தவிர கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளை இணைந்து கடந்த 2 மாதங்களில் 7,200 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 10 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு இந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐசி) விரிவுப்படுத்தப்படும்.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >

People also Read