பழங்குடியினருக்கு 100 % இடஒதுக்கீடு வழங்க பிறப்பித்த உத்தரவு செல்லாது

  • பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களிலும் அதே இனத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க ஆந்திரப் பிரதேச அரசு கடந்த 2000ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • நமது அரசமைப்புச் சட்டத்தை வகுத்த வல்லுநர்கள் நன்கு ஆராய்ந்து இடஒதுக்கீட்டு கொள்கையை வடிவமைத்துள்ளனர்.
  • கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 50 சதவீததத்துக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று ஏற்கெனவே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஏதேனும் சிறப்புக் காரணம் இருந்தால் மட்டுமே 50 சதவீதத்துக்கு அதிகமாக இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இவை, கடந்த 1992-ஆம் ஆண்டில் மண்டல் கமிஷன் வழக்கில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் அதே இனத்தைச் சேர்ந்தவர்களையே நியமிப்பதற்கு எந்தவொரு சிறப்புக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
  • பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் அதே இனத்தைச் சேர்ந்தவர்களே கற்பிக்க வேண்டும் என்பது விரும்ப தகாத செயலாகும் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
< Previous அரசியல் அறிவியல் Next சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் >

People also Read