நீட் தேர்வு: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்

  • ”எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்), அரசு உதவி பெறாத சிறுபான்மையினர், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
  • இத்தேர்வில் இருந்து அத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இந்த விவகாரத்தில் சிறுபான்மையினர். தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை என்றும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை மத்திய அரசு 2016-இல் வெளியிட்டது.
  • எனினும், தமிழகத்திற்கு அந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
< Previous அரசியல் அறிவியல் Next சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் >