தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

புதுமைப்பெண்  திட்டம்

  • புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வியில் பெண் மாணவிகளின் சேர்க்கை 34% அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்துள்ளதாகவும், 1.19 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுமைப்பெண் திட்டம் பற்றி

  • தொடக்கம் – செப்டம்பர் 5, 2022
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • நன்மை – மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம் பற்றி

  • தொடக்கம் – மார்ச் 1, 2022
  • குறிக்கோள் – தமிழ்நாட்டின் 1 மில்லியன் இளைஞர்களிடையே திறனை மேம்படுத்துதல்.

தமிழ் மொழி மற்றும் அறிஞர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள

  • தமிழறிஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் 35 விருதுகள் வழங்கப்படுகிறது.
  • இலக்கிய மாமணி’ என்ற புதிய விருது மூன்று தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருது பெரும் அறிஞர்களுக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்படும்
  • இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை 2025 ஆம் ஆண்டு சென்னையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • குறள் முற்றோதல் திட்டத்தின் கீழ் 1,330 குரல்களை ஒப்புவிக்கும் 451 மாணவர்களுக்கு ₹15,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.
  • தமிழ்ப் பரப்புரைக் கழகம் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >