தமிழ்நாடு நிகழ்வுகள்

கும்பகோணம் வெற்றிலை – புவிசார் குறியீடு (GI டேக்)

  • குறிப்பிடத்தக்க மென்மைக்கு (கொழுந்து வெற்றிலை) பெயர் பெற்ற கும்பகோணம் வெற்றிலை, அதன் முன்கூட்டிய அறுவடை காரணமாக, புவிசார் குறியீடுட்டைப் (GI tag) பெற்றுள்ளது.
  • தனித்துவமான அறுவடை முறை: மற்ற பகுதிகளில் வெற்றிலையானது 30 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது. இதற்கு மாறாக, கும்பகோணம் வெற்றிலை ஒவ்வொரு 15 முதல் 18 நாட்களுக்கும் அறுவடை செய்யப்படுகிறது, இது அவற்றை மிகவும் மென்மையாக்குகிறது.
  • ‘வெள்ளைக்கொடி‘ வகை வெளிர் மஞ்சள் பச்சை நிறமும் நீண்ட இலைகளும் கொண்டது, அதே நேரம் ‘பச்சைக்கொடி’ வகை இலைகள் பச்சை நிறமும் இதய வடிவமும் கொண்டவை.
  • கும்பகோணம் வெற்றிலையானது இலக்கிய படைப்புகள் மற்றும் கவிதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியார், தனது ஒரு கவிதையில், காவிரி ஆற்றங்கரையில் வளர்க்கப்படும் வெற்றிலையை பின்வருமாறு குறிப்பிட்டார்: “கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் , காவேரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.”

இருவாச்சிப் பறவை பாதுகாப்பு முன்முயற்சி

  • தமிழ்நாடு நான்கு வகையான இருவாச்சிப் பறவைகளைப் பாதுகாக்க ஒரு திட்டவரைவை உருவாக்கி வருகிறது – பெரிய இருவாச்சிப் பறவை, மலபார் கருப்பு-வெள்ளை இருவாச்சிப் பறவை, இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவை, மற்றும் மலபார் சாம்பல் இருவாச்சிப் பறவை
  • சிறப்பு மையம்: இருவாச்சிப் பறவைகளை ஆய்வு செய்து பாதுகாக்க அண்ணாமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இருவாச்சிப் பறவைகள் பாதுகாப்புக்கான  ஒரு  சிறப்பு மையம் நிறுவப்படும்.
  • சுற்றுச்சூழல் பங்கு : இருவாச்சிப் பறவைகள் பழம் உண்ணும் பறவைகள் ஆகும், இவை விதை பரவலுக்கு உதவி, சுற்றுச்சூழல் மீட்டெடுப்புக்கு பங்களிக்கின்றன.
  • இதுவரை யாரும் இந்தியாவில் இருவாச்சிப் பறவைகளின் எண்ணிக்கையை மதிப்பிடவில்லை. அதனால்தான், தமிழ்நாடு அரசின் இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
  • இந்த மரங்கள் இருவாச்சிப் பறவைகள் கூடு கட்ட மிகவும் முக்கியமானவை. இவை அரிய இனங்கள். இவற்றில், டிப்டெரோகார்பஸ் இண்டிகஸ்   மற்றும் கிரிப்டோகாரியா அனமலையானா  IUCN  சிவப்புப் பட்டியலின்படி ‘அழிவின் விளிம்பில் (endangered)’ உள்ளன, மிரிஸ்டிகா மலபாரிகா ‘பாதிக்கப்படக்கூடியது(vulnerable )’ என்ற நிலையில் உள்ளது.

முக்கிய பாதுகாப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டவை:

  • அண்ணாமலை புலிகள் காப்பகம் (ATR) – பெரிய இருவாச்சிப் பறவை, மலபார் சாம்பல் இருவாச்சிப் பறவை
  • அதிகடவு-பிள்ளூர்-பவானிசாகர் பள்ளத்தாக்கு – மலபார் கருப்பு-வெள்ளை இருவாச்சிப் பறவை
  • சத்தியமங்கலம் காடுகள் – இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவை

IUCN  சிவப்புப் பட்டியல் நிலை

  • பெரிய இருவாச்சிப் பறவை & மலபார் சாம்பல் இருவாச்சிப் பறவை – பாதிக்கப்படக்கூடியது (Vulnerable)
  • மலபார் கருப்பு-வெள்ளை இருவாச்சிப் பறவை – அச்சுறுத்தலுக்கு அருகில் (Near Threatened)
  • இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவை (நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது) – குறைந்த கவலை (Least Concern)

 

Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >