ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

  • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • இது வரை மத்திய நீர்வளம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இருந்தது.
  • முந்தைய மத்திய நீர்வளம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் அமைச்சகத்தின் கீழ் இருந்த மற்ற நதிகள் நீர் மேலாண்மை ஆணையங்களும் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • ஆணையத்தில் பணியாற்றுபவர்கள், ஊதியம் உள்பட மற்ற நிர்வாக நடைமுறைகளுக்கு ஒரு அமைச்சகத்தின்கீழ் ஆணையம் இருக்கும்.
  • இந்த துறைக்கோ அமைச்சகத்திற்கோ ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்படாது. அப்படி பறிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடியும்.
  • இதில் முக்கியமானது இந்த ஆணையத்தின் தலைவராக இதுவரை மத்திய நீர் ஆணையத்தின் தலைவரே பொறுப்பேற்று வருகிறார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

  • தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. அதன் படி 2018-ஆம் ஆண்டில் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

 

ஜல்சக்தி அபியான்

  • நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது.v இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு ”ஜல்சக்தி அபியான்” என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 255 கூடுதல் மற்றம் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • இந்த திட்டத்தின் அமைச்சர் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத் ஆவார்.
< Previous அரசியல் அறிவியல் Next மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் >