சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு உதவி கடன்

  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • 2019-20 நிதி ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவசாசம் ஜுலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல வரி தணிக்கை காலம் செப்டம்பருக்கு பதிலாக அக்டோபர் 31 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் நிதிப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்புத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
  • மின் விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) ஒருமுறை நிதி உதவி அளிக்கும் விதமாக ரூ.90 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) பகுதி அளவிலான கடன் உத்தரவாத திட்டத்தை ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு அரசு அளித்துள்ளது.
  • அனைத்து மத்திய அரசு நிறுவனங்களின் ஒப்பந்த பணிக்கான காலம் 6 மாதங்களுக்கு நிட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்ததாரர்களுக்கு பயனளிக்கும்.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >

People also Read