”சச்சேத்” ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் ராஜ்நாத் சிங்

”சச்சேத்” ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் ராஜ்நாத் சிங்
  • நாட்டின் கடற்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ”சச்சேத்” ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • மேலும், சி-450, சி-451 ஆகிய அதிவிரைவு கப்பல்களின் செயல்பாட்டையும் அவர் தொடக்கி வைத்தார்.
  • கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல்களை காணொலிக் காட்சி வாயிலாக ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ”சச்சேத்” ரோந்து கப்பலானது கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. முழுவதும் உள்நாட்டிலேயே  உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளும், தொலைத்தொடர்புக் கருவிகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
  • அதிவிரைவு கப்பல்கள்: சி-450, சி-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன.
  • நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கப்பல்களுடன் சேர்த்து இந்தியக் கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது.
< Previous வரலாறு Next பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் >