”கோல்” – டிஜிட்டல் திறன் பயிற்சி

”கோல்” – டிஜிட்டல் திறன் பயிற்சி
  • மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா ”கோல்-Goal” என்ற டிஜிட்டல் திறன் பயிற்சியை அறிமுகம் செய்து வைத்தார்.
  • பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த திறன் பயிற்சி வழங்குகிறது.
  • கோல் மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • ‘GOAL’ – Going Online As Leaders என்பதாகும். இதில் 5000 பழங்குடியின இளைஞர்களுக்கு பலதரப்பட்ட பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கும் மற்றும் பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின விவகார அமைச்சகம்

  • அமைச்சர் – அர்ஜுன் முண்டா
  • தலைமையிடம் – டெல்லி
  • தொடக்கம் – 1999
< Previous அறிவியல் Next ஊடகம் மற்றும் தொலைதொடர்பு >

People also Read