குறு, சிறு தொழில்கள் மேம்பாட்டுக்கு புதிய இணையதளம் தொடக்கம்

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் www.Champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும்.
  • நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, தேசிய மற்றும் உலகளாவிய சாம்பியன்ஸ் என்ற நிலையை நோக்கிய நகர்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்துக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப்படுகிறது.
  • குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்.
  • CHAMPIONS – Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength.
< Previous அறிவியல் Next ஊடகம் மற்றும் தொலைதொடர்பு >

People also Read