உரப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

உரப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
  • வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த நிதியாண்டில் 1 லட்சத்துக்கும்மேற்பட்ட கிராமங்களில் உயிர்/கரிம உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும்,  ரசாயண பயன்பாட்டை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
  • 2015ல் தொடங்கப்பட்ட மண் சுகாதார அட்டை திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு வருட இடைவெளியில் மண் சுகாதார அட்டைகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த அட்டைகள் விவசாயிக்களுக்கு தங்கள் மண்ணின் ஊட்டசத்து நிலை குறித்த தகவல்களையும்,  மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் மேம்படுத்துவதற்கும் சரியான அளவைப் பற்றிய பரிந்துரைகளையும் வழங்குகின்றன.
  • கிராம அபிவிருத்தி அமைச்சகத்துடன் இணைந்து பாதுகாப்பான சத்தான உணவுக்காக (பாரதிய பிராக்ரிதிக் கிருஷி பததி – Bhartiya Prakritik Krishi Padhati) சரியான அளவு உரங்கள் பயன்பாடு மற்றும் கிராம வேளாண்மை மேம்படுத்துதல் பற்றிய விரிவான பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
< Previous அரசியல் அறிவியல் Next மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் >