இந்தியாவுக்கு மேலும் ரூ.7,500 கோடி கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்

  • கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஏற்கெனவே. இந்திய மருத்துவத்துறையின் மேம்பாட்டுக்காக உடனடி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி கடனுதவியை உலக வங்கி கடந்த மாதம் அறிவித்த நிலையில், இப்போது மேலும் ரூ.7,500 கோடி கடனுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதில் ரூ.4125 கோடி கடனை உலக வங்கியின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு (ஐடிஏ) இந்தியாவுக்கு வழங்கும்.
  • ரூ.1,500 கோடி கடனை மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (ஐபிஆர்டி) வழங்கும்.
  • மீதமள்ள ரூ.1,875 கோடி கடன் தொகை, ஜுன் 30-ஆம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும்.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >

People also Read