அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

சேவை உற்பத்தி குறியீடு (ISP)

  • பின்னணி: இந்தியாவின் சேவைத் துறையின் வளர்ச்சியில் ஏற்படும் குறுகிய கால மாற்றங்களை அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய மாதாந்திர பேரியல் பொருளாதாரக் குறியீடான ‘சேவை உற்பத்தி குறியீட்டை’ (ISP), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஜூலை 2026-இல் அறிமுகப்படுத்த உள்ளது.
  • தொழில்துறை உற்பத்தி குறியீட்டிற்கு (IIP) இணையான சேவைத் துறை சார்ந்த குறியீடாக வடிவமைக்கப்பட்டுள்ள ISP, முறைசார்ந்த சேவைத் துறைகளின் செயல்பாடு குறித்த தொடர்ச்சியான மற்றும் துல்லியமான தரவுகளை வழங்கும்; அத்துடன் நாட்டின் பொருளாதாரக் கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும்.

சேவை உற்பத்தி குறியீடு (ISP)

  • சேவை உற்பத்தி குறியீடு (ISP) என்பது இந்தியாவின் சேவைத் துறையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியைத் தொடர்ந்து அளவிடவும் கண்காணிக்கவும் முன்மொழியப்பட்ட ஒரு குறியீடாகும்.
  • இது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) முன்மொழியப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றியும், ISP-க்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலுடனும் இதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • ISP ஆனது தொழில்துறை உற்பத்தி குறியீட்டுடன்இணைந்து செயல்பட்டு, சேவைப் பொருளாதாரம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து வழங்கும்.
  • இக்குறியீட்டிற்கான அடிப்படை ஆண்டாக 2024–25 ஆம் ஆண்டு அமையும்.
  • இது முக்கியமாக சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும்.
  • வர்த்தகம், போக்குவரத்து, வங்கிச் சேவை, காப்பீடு, விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் போன்ற முக்கிய சேவைத் துறைகளை இக்குறியீடு உள்ளடக்கும்.
  • இது உலகளாவிய தரநிலைகளின்படி தரவு இருப்பு, துறைசார் உள்ளடக்கம் மற்றும் பொருத்தமான விலை சரிசெய்தல் காரணிகள் ஆகியவற்றை மதிப்பிடும்.
  • போதுமான தரவுகள் இல்லாததால், முறைசாராத் துறையின் சேவைகள் தற்போதைக்கு இக்குறியீட்டில் சேர்க்கப்படாது என்று முன்மொழியப்பட்டுள்ளது.
  • சேவைத்துறை மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) சுமார் 10% பங்களிக்கும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளும், ‘பதிவுசெய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு’ தரவுகள் கிடைக்கும் வரை தற்காலிகமாக விலக்கி வைக்கப்படும்.

 

Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் >