அரசியல் அறிவியல்

மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்

Tele MANAS

  • Tele MANAS இன் சிறப்புப் பிரிவை இயக்குவதில் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு (MoD) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது
  • Tele MANAS என்பது மாநிலங்களுக்கு இடையேயான தொலை தொடர்பு மனநலம் சார்ந்த உதவி வழங்கீட்டு மற்றும் வலையமைப்பாகும்.

Tele MANAS பற்றி

  • தொடக்கம் – அக்டோபர் 2022.
  • செயல்படுத்தியது – சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW)
  • குறிக்கோள் – தொலை தொடர்பு மனநலம் சார்ந்த சேவைகளை 24X7 நேரமும் இலவசமாக வழங்குதல்.
  • இது தேசிய மனநலத் திட்டத்தின் (NMHP) கீழ் செயல்படுத்தப்பட்டது.
  • இலவச உதவி எண் – 14416.

காசநோய் ஒழிப்பு

  • 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
  • சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியா 50 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, இருப்பினும் இந்த நோய் நாட்டின் கடுமையான சுகாதார நெருக்கடியாக தொடர்கிறது.

குறிப்பு

  • காசநோயால் ஒவ்வொரு ஆண்டும் 4,80,000 இந்தியர்கள் அல்லது ஒவ்வொரு நாளும் 1,400 நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
  • காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியா நோயாகும்.
  • தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமானது (NTEP) காசநோய் ஒழிப்பை விரைவுபடுத்த தேசிய மூலோபாயத் திட்டம் 2017–25 மூலம் வழிநடத்தப்படுகிறது.

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

நோட்டா

  • இந்தூர் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.
  • இதுவரை நோட்டாவுக்கு பதிவான வாக்குகளிலேயே இதுதான் அதிகமாகும்.

குறிப்பு

  • தொடக்கம் – செப்டம்பர் 2013.
  • உச்ச நீதிமன்றம் நோட்டாவை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) உத்தரவிட்டது.
  • ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் நோட்டாவிற்குப் பதிவானால், வெற்றி பெற்ற இரண்டாவது வேட்பாளர் வெற்றி பெறுவார்
Next Current Affairs அரசியல் அறிவியல் >