Tag: பழங்குடியின விவகார அமைச்சகம்

”கோல்” – டிஜிட்டல் திறன் பயிற்சி

”கோல்” – டிஜிட்டல் திறன் பயிற்சி

மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா ”கோல்-Goal” என்ற டிஜிட்டல் திறன் பயிற்சியை அறிமுகம் செய்து வைத்தார். பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த திறன் பயிற்சி வழங்குகிறது. கோல் மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்குவதே இதன் நோக்கமாகும். ‘GOAL’ – Going Online As Leaders என்பதாகும். இதில் 5000 பழங்குடியின இளைஞர்களுக்கு பலதரப்பட்ட பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மூலம் பழங்குடியின இளைஞர்களுக்கும் மற்றும் பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின விவகார அமைச்சகம் அமைச்சர் – அர்ஜுன் முண்டா தலைமையிடம் – டெல்லி தொடக்கம் - 1999

சமூக வன வள உரிமைகள் குறித்த ஆய்வு

பழங்குடியின விவகார அமைச்சகம் சமீபத்தில் சமூக வன வள உரிமைகள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. சமூக வன உரிமைகளை செயல்படுத்த சரியான வழிகாட்டுதல் தேவை என தெரிவித்து உள்ளது. பழங்குடியினர் மற்றும் பிற வனவளங்கள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 எஃப்.ஆர்.ஏ சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கீழ் சமூக வன வள உரிமைகளை வரையறுக்கிறது. மேலும் எஃப்.ஆர்.ஏ கீழ் ஒரு கிராமம் வன நிலங்களை வைத்திருந்தால் அதை அரசு பெற்று கொள்ளும் உரிமை உண்டு. கிராம சபைகளுக்கு வன வளங்கள் பாதுகாக்க உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.