Tag: காமன்வெல்த்

32வது காமன்வெல்த் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாடு

32வது காமன்வெல்த் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாடு

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் 32வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். இம்மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இம்மாநாட்டின் மையக்கருத்து - ‘Delivering a co-ordinated Commonwealth COVID-19 response’ என்பதாகும். காமன்வெல்த் 54 நாடுகள் – ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பசிபிக் நாடுகள். இவையெல்லாம் சிறிய, பெரிய, பணக்கார மற்றும் ஏழை நாடுகள் ஆகும். 26வது காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் மாநாடு வரும் ஜுன் 22-27 வரை ரவாண்டாவின் கிகாலி என்ற இடத்தில் நடைபெறுவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்றால் தற்போது ஒத்திவைக்கப்பட்டது.

காமன்வெல்த் அமைப்பில் மாலத்தீவு மீண்டும் இணைப்பு

காமன்வெல்த் அமைப்பில் மாலத்தீவு மீண்டும் இணைப்பு

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிய மாலத்தீவு, அந்த அமைப்பில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த்தில், மாலத்தீவு 47 ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்தது. இந்த நிலையில், முன்னாள் அதிபா் அப்துல்லா யாமீனின் ஆட்சிக் காலத்தின்போது மாலத்தீவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக காமன்வெல்த் அமைப்பு குற்றம் சாட்டியது. அந்த அமைப்பிலிருந்து மாலத்தீவு கடந்த 2016-ஆம் ஆண்டு விலகியது. இந்த நிலையில், யாமீனுக்குப் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற இப்ராஹிம் முகமது சோலீயின் கோரிக்கையை ஏற்று, காமன்வெல்த் அமைப்பில் மாலத்தீவு மீண்டும் சோ்க்கப்பட்டது.