Tag: உலக வங்கி

இந்தியாவுக்கு மேலும் ரூ.7,500 கோடி கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே. இந்திய மருத்துவத்துறையின் மேம்பாட்டுக்காக உடனடி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி கடனுதவியை உலக வங்கி கடந்த மாதம் அறிவித்த நிலையில், இப்போது மேலும் ரூ.7,500 கோடி கடனுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.4125 கோடி கடனை உலக வங்கியின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு (ஐடிஏ) இந்தியாவுக்கு வழங்கும். ரூ.1,500 கோடி கடனை மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (ஐபிஆர்டி) வழங்கும். மீதமள்ள ரூ.1,875 கோடி கடன் தொகை, ஜுன் 30-ஆம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும்.

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் வறுமை அதிகரிப்பு

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் வறுமை அதிகரிப்பு

“கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் COVID-19 பாதிப்புகளால் மக்கள் வறுமையை எதிர்நோக்கி உள்ளனர்என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. கரோனாவால் 11 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆசிய பசிபிக் பகுதியின் வளர்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டில்8% ஆக இருந்தது. தற்போது 2.1% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கரோனா தாக்கத்தால் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 35 மில்லியன் மக்கள் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்காக உலக வங்கி நிதியுதவி

தமிழ்நாட்டில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மேம்படுத்த உலக வங்கி ரூ.5000 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. மேலும் 25 நீர் நிலைகள் மேம்படுத்தவும் (நிலத்தடி நீர் அதிகரிக்க) உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரியும்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக சரியும் என உலக வங்கி கணித்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் காணப்படும் மந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள 2019-20-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக சரியும். இருப்பினும், அடுத்து வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு 5.8 சதவீத வளா்ச்சியை எட்டும். 2019 ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி முறையே 5 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த வளா்ச்சி, கடந்த 2013-லிருந்து ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாக உள்ளது. தெற்காசிய மண்டல நாடுகளின் வளா்ச்சியைப் பொருத்தவரையில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, 2022-இல் 6 சதவீத வளா்ச்சியை எட்டும். சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ளஅரசியல் பதற்றம், பெரு நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த துறைகளில் சீா்திருத்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஆகியவற்றால் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட நாடுகளின் வளா்ச்சி எதிர்பார்த்ததைவிட குறையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.