இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497

ஒரு நபா் ஒரு திருமணமான பெண்ணுடன் அவளது கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொண்டால், அந்த நபா் சட்டப்படி தண்டிக்கப்படுவாா் என பிரிவு 497 கூறுகிறது.

மாறாக இதில் சமந்தப்பட்ட பெண் தண்டிக்கப்பட மாட்டாா்.

 • பிறா்மனை உறவு என்பது “திருமணமானநபருக்கும் அவரது வாழ்க்கைதுணை இல்லாத நபருக்கும் இடையே நடைபெறும் உடலுறவு ஆகும்”.
 • அத்தகையநபருக்கு ஐந்து வருடங்கள் அல்லது அபராதம் அல்லது இரண்டையும் தேவையான காலத்திற்கு  சிறைத்தண்டனையாக விதிக்க முடியும்.
 • அவ்வாறானசந்தர்ப்பத்தில் மனைவி ஒரு குற்றவாளியாக தண்டிக்கப்பட மாட்டார்.
 • பாலியல்உடலுறவில் ஈடுபட்ட ஒழுக்கம் கெட்ட கணவர் அல்லது தனது கணவருடன் உடலுறவு மேற்கொண்ட பெண் மீது வழக்குத் தொடர 497 வது பிரிவு பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கவில்லை.
 • மாறாக விபச்சாரம்செய்பவருக்கு எதிராக வழக்குத் தொடர கணவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விபச்சாரம் குறித்த கடந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்

 • பிரிவு497 சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக 1954 இல் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது.
 • 1985 ஆம்ஆண்டில், புகார்களை அளிக்கக்கூடிய  பெண்களை ஒரு பகுதியாக சட்டத்தில் சேர்க்க தேவையில்லை என்று  கூறியது.
 • 1988 ஆம்ஆண்டில், விபச்சாரச் சட்டம் “வாளைக் காட்டிலும் கவசம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
 • மேலும்,1996 ல் முந்தையதில்லி உயர்நீதிமன்றத்தின் படி பிரிஜ் லால் பிஷ்னோய் மற்றும் அரசிற்கு இடையே நடைபெற்ற வழக்கில் திருமணமான பெண்ணுடன் உடலுறவு கொள்வது மட்டுமே விபச்சாரமாக கருதப்படும். விதவை, பாலியல் தொழிலாளி அல்லது திருமணமாகாத பெண்ணுடன் உடலுறவு கொள்வது  விபச்சாரமாக கருதப்பட மாட்டாது என தீா்ப்பு அளித்தது.

பிரிவு 497 இன் சமீபத்திய தீர்ப்பு

ஜோசப் ஷைன் Vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கு

சவால்

 • ஐபிசியின்பிரிவு 497 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்(CrPC) பிரிவு 198 (2).
 • CrPC யின் பிரிவு 198 (2) இன் கீழ், கணவா் மட்டும் விபச்சாரத்திற்கு எதிராக புகார் செய்யலாம்.

நீதிமன்றத்தின் நிலைப்பாடு:

மனைவி ஒரு பண்டமல்ல

 • கணவன்தன் மனைவியின் திருமண உறவுக்கு புறம்பான விவகாரத்தை அனுமதித்தால் அல்லது ஒப்புக் கொண்டால் விபச்சாரம் ஒரு குற்றம் அல்ல.
 • பிரிவு497 திருமணமான ஒரு பெண்ணை தனது கணவரின் சொத்து என்று கருதுகிறது.
 • இதுஒரு கணவரை தனது மனைவியின் பாலியல் தோ்வுகளுக்கு  உரிமதாரராக மாற்றுகிறது.

ஆணாதிக்கம் படிப்படியாக நீக்கப்பட்டது

 • பெண் என்பவள் தனது கணவரின் தனிப்பட்ட சொத்து எனும் இந்தப் பிற்போக்கான, ஆணாதிக்கரீதியான கருத்தை உச்ச நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.
 • பெண்களின் பாலியல் தேர்வையும், உறவுகள் தொடர்பான அவர்களது உரிமையையும்  வழங்குவதே  மனிதசுதந்திரமாகும்.

பெண்களுக்கு எதிரான பாகுபாடு

 • ஒரு நபா் திருமணமானபெண்ணுடன் அவளது கணவரின் அனுமதியின்றி பாலியல் உறவு வைத்திருந்தால் சிறையில் அடைக்கப்படலாம் என்று சட்டம் கூறியது.
 • அரசியல் சட்டக்கூறு 14-ன் கீழ் உத்தரவாதம் வழங்கப்பட்ட சம உரிமையையும் 497-வது சட்டப் பிரிவு மீறியது; பெண் என்பவள் செயலற்ற நிறுவனமாகவும், கணவரின் உடைமையாகவும் நடத்தப்பட்டாள் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

 • உச்சநீதிமன்றம்இச்சட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அழைத்தது, ஏனெனில் அது “ஒரு கணவரை எஜமானராக கருதுகிறது.”
 • நீதிமன்றம்இப்போது இந்த இரண்டு விதிமுறைகளையும் முறியடித்து விபச்சாரத்தை நியாயப்படுத்தியுள்ளது.
 • உச்ச நீதிமன்றம், “தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருக்கும் வேறொரு ஆணுக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஆணுக்கு இருந்துவந்த நிலையில், அதேபோல் வழக்கு தொடர்வதற்கான உரிமையைப் பெண்களுக்கு மறுக்கும் இந்தச் சட்டம் நன்மை பயக்கக்கூடியது என்று கருதிவிட முடியாது; சொல்லப்போனால், இச்சட்டம் பாரபட்சமானது” என்றும் கூறியிருக்கிறது.

பல நாடுகள் இதுபோன்ற சட்டங்களை எப்போதோ கைவிட்டுவிட்டன. சமத்துவத்துக்கான போராட்டங்கள் பல்வேறு தளங்களில் இன்றைக்கும் தொடர்ந்து வரும் நிலையில், வழக்கொழிந்த இந்தச் சட்டத்தை நீக்கியது சாியே.