இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரியும்

  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.
  • வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் காணப்படும் மந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள 2019-20-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக சரியும். இருப்பினும், அடுத்து வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு 5.8 சதவீத வளா்ச்சியை எட்டும்.
  • 2019 ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி முறையே 5 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த வளா்ச்சி, கடந்த 2013-லிருந்து ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாக உள்ளது.
  • தெற்காசிய மண்டல நாடுகளின் வளா்ச்சியைப் பொருத்தவரையில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, 2022-இல் 6 சதவீத வளா்ச்சியை எட்டும்.
  • சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ளஅரசியல் பதற்றம், பெரு நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த துறைகளில் சீா்திருத்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஆகியவற்றால் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட நாடுகளின் வளா்ச்சி எதிர்பார்த்ததைவிட குறையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >

People also Read